எழுதினேன், அவள் வந்தாள்
நிறுத்தினேன், அவள் சென்றாள்
எழுத்தண்ட அவளில்லை
அவளண்ட எழுத்தில்லை
எழுத்தா? அவளா?
என் செய்வேன் நான்?
எனக்கே புரியாத என்னை
என்னைவிட புரிந்தவள் அவள்
புரிந்தபின்னும் பிரிவோமென்று
பிரியும்போதும் புரியவில்லை
சத்தங்களின் அமைதியில்
மௌனங்களின் கதறலில்
கண்டுகொண்டேன் அவளை
கலங்கின கண்களுடே
வார்த்தைகளுடன் போரிட்டு
தோற்றப்பின்தான் தெரிந்தது
மௌனங்கள் போதும்
உனதன்பைச் சொல்ல
ஊரறியும் ராவண நேசம்
யாரறிவார் மாதவி பாசம்?
மணல்வீடென்றறிந்தும்
தென்றலுடன் காதல் !
இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற: