தாய்மடி தேடி அழுகின்ற
பால்மணம் மறவா பாலகன் நான்
உன்மடியெனக்கு ஓர் நாளேனும்
கருவறையாக கிடைக்குமோ?
பல்லவ சிற்பியின் சிறுவுளி தவறால்
சிதைந்து போன சிற்பம் நான்
கல்லாய் நானும் கரையும் முன்னே
கடைவிரல் ஸ்பரிசம் கிடைக்குமோ?
பிணிகள் மூத்த பித்தன் கனவில்
உயிர்த்து வாழும் சோகம் நான்
முடியுமுன்னே ஓர் முறையேனும்
முத்தமொன்று கிடைக்குமோ?
காதலின் தலைவன் தானென நினைத்து
காவியம் வடிக்கும் கவிஞன் நான்
கவிதை முடியும் கடைநொடியேனும்
கரிசல்பார்வை கிடைக்குமோ?
தேவைகளற்ற காதலை தேடும்
தேன்சுவையறியா தேனி நான்
தேடும்போது ஓர் முறையேனும்
தேடும்காதல் கிடைக்குமோ?
தனிமை ஒழிக்கும் தேவதை யாரோ?
தாகம் தணிக்கும் கானல் நீரோ?
உண்மையறிந்தும் பொய்யை நாடும்
அற்பமான மானிட வேரோ?
நான்!
முகப்பு > வலைப்பதிவுகள்இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற: