முன்னிரவு நேரம்
சில்லென்ற மழைச்சாரல்
மெலிதான மண்வாசனை
தெருவோர மரங்களின் மௌனம்
மஞ்சள் வெயில் உமிழும் விளக்குகள்
யாருமற்ற சாலையொன்றில்
இருவருக்காக ஒரு தேநீர் கடை
இதமான தேநீருடன்
சுகமாக கதைகள் பேச
தினம் பார்த்த பூமுகம்
புதிதாக பார்வை வீச
மிதமான குளிரிரவில்
மெதுவாக மெதுவாக
மீண்டும் மலர்ந்தது
மறந்துவிட்ட நம் காதல்!
பிடித்திருந்தது
புரிந்தது
குறிக்கோளின்றி சிலநாள்
இருத்தலும் நலமே!
இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற: