நான் கடவுள்

21 Jul 2025

முகப்பு >  வலைப்பதிவுகள்

சிலர்க்கூடி தேர் இழுக்க
பலர்க்காணும் கடவுள் போல்
இங்கு
நான் மட்டும் தேர் இழுக்க
யார் காண?
எதை காண?
இவ்வுலகம் எனை காண,
எவ்வுலகம் நான் காண?

முடிவிலா கேள்விகளும்
பதிலிலா மௌனங்களும்
தெளிவிலா ஞானங்களும்
குறைவிலா மோனங்களும்
எனை யாரும்,
கூடாதொரு தனிமையில்
தேடாதொரு வெறுமையில்
காணாதொரு கடவுள் தேடி
பேணாதொரு வாழ்வை நாடி
ஓய்ந்து வீழ்ந்து மாய்ந்து
போகச்சொல்ல …

அன்றொரு நாள்

தரைவீழ்ந்த பூவின் வாசமும்
பூவிழுந்த தரையின் நேசமும்
ஒன்றென உணர்ந்த ஓர் தருணம்
நானுமில்லை தேருமில்லை
தேவையில்லை தேடலில்லை
கடவுள் காண தோன்றவில்லை

என் தேர்
என் தேவை
என் தேடல்
என் கடவுள்

நான் தேர்
நான் தேவை
நான் தேடல்
நான் கடவுள்

முகப்பு >  வலைப்பதிவுகள்

இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற:


Home  |  Blog  |  வலைப்பதிவு  |  Coach

copyleft @ 2009.