காவி நிறத்தவளே
கண் தூங்க மறுத்தவளே
என் மேனி அளந்தவளே
மெய்யாக இருந்தவளே
போதும் போதுமென்றேன்
போகாத எல்லை சென்றாய்
மீண்டும் வாழ்வோமென்றேன்
மனமறுத்து சிறுத்து நின்றாய்
காலங்கடந்தும் காதலென்றேன்
தாபங்கழிந்தால் போதுமென்றாய்
கோபம் மிகுந்த நேரமொன்றில்
கூடுகழிந்து பறந்துசென்றாய்
வாழாத வாழ்விதற்கா
வாகாயென் வாசல் வந்தாய்?
சேராமல் போவதற்கா
தீராத காதலென்றாய்?
புயலழித்த மரத்தடியில்
கூடுதேடும் ஒருகுருவி
வேயெறித்த செங்கதிரில்
நிழல்தேடும் சிறுபுரவி
நான்…
பாரியின் தேர்!
முகப்பு > வலைப்பதிவுகள்இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற: