சலனமில்லா பெருங்கூச்சல்
பிரேம்குமார் மாசிலாமணி


எம் காதல்

05 Sep 2026

ஊரறிந்த உறவுகளில்
உளமறிந்த காதலுண்டோ
யாருணர பூமலரும்
பாருலகில் யாரறிவார் ?

காணாத அன்பென்றும்
களவாடப்படுமன்றோ
ஊரறியாவோர் திசையில்
உமியாக உலருமன்றோ

மந்தையென மாடறியும்
சந்தையென யாரறிவார் ?
மந்தைக்கு சில
சந்தைக்கு சில

காதலென்னும் பெருவெளியில்
மானிடரும் மந்தைகளே !

வந்தவைக்கு நன்றி
போனவைக்கு நன்றி
வாராமல் தூரமாய்
நின்றவைக்கும் நன்றி

காதலுக்கும் நன்றி
கவிகளுக்கும் நன்றி
எனையெனக்கு உணர்த்திய
கண்ணீருக்கும் நன்றி

எம் காதல் குறைவதில்லை
என் தேடல் முடிவதில்லை
உடல்தாண்டி உயிர்த்தாண்டி
உணர்வுலகில் நிலைத்திருப்பேன்

என்னளவில் திளைத்திருப்பேன் !


இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்கள் எண்ணங்கள் மற்றும் கேள்விகளை பகிர்ந்துகொள்ள விரும்பினால்:


Home  |  Blog  |  வலைப்பதிவு  |  Coach
copyleft @ 2009.