சலனமில்லா பெருங்கூச்சல்
பிரேம்குமார் மாசிலாமணி


கொன்றுவிட்டுப் போ

12 Sep 2026

காதல் கொல்லும்
கவிதை கொல்லும்
கார்குழலேந்திய
காரிகை கொல்லும்

தீங்கனி கொல்லும்
திருமலர் கொல்லும்
தீமையிலூரியவுன்
தீவிழி கொல்லும்

காதணி கொல்லும்
கைவளை கொல்லும்
மாதுளைச்சிவந்த
மலர்வடு கொல்லும்

பெருவலர் கொல்லும்
சிறுமுகை கொல்லும்
தோகையும் நாணுமுன்
துளிர்மேனி கொல்லும்

உடுக்கையுங் கொல்லும்
விடுக்கையுங் கொல்லும்
அந்தரங்கம் அழிந்தவுன்
அம்மணங்கொல்லும்

கொல்வதுவொன்றே
கூடலென்றானபின்

நின்று கொல்
நன்று கொல்
மெல்ல கொல்
செல்ல கொல்

கொன்றலின் மீதொரு
மையலிருந்தால்
மீண்டுமொருமுறை
கொன்றுவிட்டுப் போ !


பொருள் விளக்கம்:


இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்கள் எண்ணங்கள் மற்றும் கேள்விகளை பகிர்ந்துகொள்ள விரும்பினால்:


Home  |  Blog  |  வலைப்பதிவு  |  Coach
copyleft @ 2009.