சலனமில்லா பெருங்கூச்சல்
பிரேம்குமார் மாசிலாமணி
11 Sep 2026
காமமுமிழும் இதழ்களினூடே
காதலூறிய கண்களைதேடும்
கோவலன் கூடிய மாதவியே
கோகிலமில்லா குந்தவையே
பேதலித்த பேதையின்
பேதலிக்கா காமம்போல்
வேரறுத்த வீதியில்
வேண்டிநிற்கும் வாதையே
எதற்கென்னை விற்றாய்?
கீழடிப் பெண்ணே !
கவியுணரா காவியமாய்
பொட்டழகே ஓவியமாய்
கடல்தாண்டி வந்ததென
கைநழுவி போனதென்ன
பிரிவுகளே உறவுகளாய்
உருக்கொண்டு உருக்க
தனிமை மட்டும் தாயாக
தன்னிலையில் இருக்க
மலையருவி மார்பினிலே
தலைசாய்க்க தோனுதடி
தேனுறங்கும் பூவுக்குள்ளே
நானுறங்க வேணுமடி…
நானுறங்க வேணுமடி !
இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்கள் எண்ணங்கள் மற்றும் கேள்விகளை பகிர்ந்துகொள்ள விரும்பினால்: