சலனமில்லா பெருங்கூச்சல்
பிரேம்குமார் மாசிலாமணி


மழலை

19 Nov 2026

களவடங்கும் களிறடங்கும்
கதிருமிழும் களமடங்கும்
கலையடங்கும் குழலடங்கும்
சித்திரப்பெண் சிலையடங்கும்

மலையடங்கும் மழையடங்கும்
மண்ணுகுக்கும் மணமடங்கும்
உரையடங்கும் மறையடங்கும்
உதிரந்தொட்ட உறவடங்கும்

நிலமடங்கும் புயலடங்கும்
நிலவொளியில் கடலடங்கும்
தமிழடங்கும் திமிரடங்கும்
திரியுமிந்த சுடரடங்கும்

நாவடங்கும் பாவடங்கும்
காவியங்கள் பலவடங்கும்
தானடங்கும் வானடங்கும்
தத்துவங்கள் சிலவடங்கும்

உன்…

மழலைமொழி பேச்சினிலே !


பொருள் விளக்கம்:


இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்கள் எண்ணங்கள் மற்றும் கேள்விகளை பகிர்ந்துகொள்ள விரும்பினால்:


Home  |  Blog  |  வலைப்பதிவு  |  Coach
copyleft @ 2009.