சலனமில்லா பெருங்கூச்சல்
பிரேம்குமார் மாசிலாமணி


ரயில் பயணங்களில்

16 Sep 2026

வேகமாய் நகர்ந்த ரயில்
மெதுவாய் நகர்ந்த நிலா
கருமையாய் விரிந்த வானம்
வெறுமையாய் நின்ற நானும்

நேரோடு வாழத்தான்
நெறியில்லா காலமடி
உறவில்லா வெளியிலே
உலவுகின்ற நேரமடி

காலங்கள் போனாலும்
கரையாத காதலடி
தேவைகள் தீர்ந்தாலும்
திசைமாறா தேடலடி

தேடித்தேடி தேய்ந்த நானும்
ஓடியோடி ஒய்ந்த அவளும்
கூடிப்பாடும் நாளுமுண்டோ?
தேடலோயும் நேரமுண்டோ?

உண்டெனில்…

தண்டவாளமாய் நானும்
ரயில்தாளமாய் அவளும்
தாலாட்டும் தூளியாக
தமிழ்மீட்டும் யாழியாக

பெயரில்லா ஊருக்கு
பயணிக்க வேணுமடி
முடிவில்லா பாதையில்
முடிந்துவிட தோணுதடி!

முற்றும்,
கரைந்துவிட தோணுதடி!


இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்கள் எண்ணங்கள் மற்றும் கேள்விகளை பகிர்ந்துகொள்ள விரும்பினால்:


Home  |  Blog  |  வலைப்பதிவு  |  Coach
copyleft @ 2009.