சலனமில்லா பெருங்கூச்சல்
பிரேம்குமார் மாசிலாமணி
30 Sep 2026
என்வாழ்விலே ஓராயிரம்
பாடல்களின் நீங்காவரம்
காதோரமாய் சுதிபாடுதே
தலைசாயவே தாலாட்டுதே
கண்ணாடியாக் காலமெல்லாம்
கண்ணுக்குள்ள நிக்குறாளே
வம்படியா போறென்னாலும்
வழியனுப்ப முடியலயே
போதுமடா எம்பொழப்பு
காலங்கெட்ட எந்தவிப்பு
தத்துவந்தாந் தோத்ததடா - ஒரு
சித்தாந்தமும் சீண்டலடா
யாருமில்லா நேரத்திலும்
கானமில்லா நேரமில்ல
நாங்கிடந்தேன் சோகத்துல
என் ராசாவோட ராகத்துல
நாட்டுப்புறப் பாட்டுக்குள்ள - என்
காயத்துக்குக் காந்தளிட்ட
சாமிகிட்ட வேண்டிக்கிட்டேன் - என்
ராசாவுக்கு நேந்துக்கிட்டேன்
காலமுள்ள காலமெல்லாம் - நீ
பாட்டுக்கட்டிப் பாடுமய்யா
ஓஞ்சுப்போன சீவனெல்லாம் - உன்
ராகத்துல மீளுமய்யா
போதுமய்யா
போதுமய்யா
உன்
பாட்டுமட்டும்
போதுமய்யா …
வாழுமய்யா
வாழுமய்யா
நீ
ராகத்துக்கு
ராசனய்யா !
இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்கள் எண்ணங்கள் மற்றும் கேள்விகளை பகிர்ந்துகொள்ள விரும்பினால்: