சலனமில்லா பெருங்கூச்சல்
பிரேம்குமார் மாசிலாமணி


விலைமகள்

25 Sep 2026

மாதுளைச் சிவப்பும்
மாம்பழ வனப்பும்
உயிர்வரை நெருடும்
உலோகச் சிரிப்பும்

வேண்டுமென வந்தோம்

காகிதப் பூவும்
குறுகுறு நாவும்
கட்டிலின் மேலவள்
கசங்கிய நாளும்

போதுமென சென்றோம்

கடிகார முள்ளாய்
ஓய்வறியா வில்லாய்
எத்தனை எத்தனை
வாதைகள் விதைத்தும்

காணோம் உன் வேதனை

கொன்றுவிடென்னை
என்றவள் கதறும்
ஒவ்வொரு முறையும்
தின்றோமவள் உடலை

கண்டோம் எம் மமதை

செய்தவர் நாம்
பட்டம் அவளுக்கு

விலைமகள்…

உண்மையில்
விற்கப்பட்ட மகள் !


இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்கள் எண்ணங்கள் மற்றும் கேள்விகளை பகிர்ந்துகொள்ள விரும்பினால்:


Home  |  Blog  |  வலைப்பதிவு  |  Coach
copyleft @ 2009.