சலனமில்லா பெருங்கூச்சல்
பிரேம்குமார் மாசிலாமணி
14 Oct 2026
நான்: யார் இதை சொல்வது? யார் நீ? யார் இந்த குரல்?
நீ தான் நான்.
நான் தான் நீ.
நான்: அப்படினா? தெரியலையே.
இது ஒரு transmission. உன் வேலை சொல்றதை அப்படியே எழுதுவது.
நான்: ஓ. அப்படியா? சரி சொல்லு. என்ன சொல்றேன்னு பார்ப்போம்.
பாரினில் பாராதது, பார்க்கவும் முடியாதது எதுவோ?
நான்: என்னடா சினிமால நாகேஷ் சிவாஜி மாதிரி கேக்குற? கடவுளா?
இல்லை.
நீ.
உன்னுள் இருக்கும் நீ.
நான்: என்னுள் இருக்கும் நானா? புரியலையே.
உனக்கு தெரியாதது இல்லை. உன் மனதில் அவ்வப்போது ஒரு குரல் உன்னுடன் பேசுமல்லவா? யாரென்று யோசித்தாயா?
நான்: குரல் தெரியும். யாருன்னு யோசிச்சதில்லை.
அந்த குரலும் நீயும் ஒன்றாகும் தருணம் தான் முக்தி.
அதை தேடித்தான் உலகெங்கும் உலவுகிறாய்.
நான்: எப்படி முக்தியடைவது?
நீ தயாரானவுடன் சொல்கிறேன்.
நான்: நான் தயார்-னு எனக்கு எப்படி தெரியும்?
உனக்கு தெரியாது. ஆனால் உணரலாம். வார்த்தைகளால் அந்த உணர்ச்சியை விவரிக்க முடியாது.
நான்: சரி. எப்ப தயாராவேன்?
முன்பே சொல்லியிருக்கிறேன்.
உன் கேள்விகள் முடிவடையும் போது.
பின்னர் சந்திப்போம்.
இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்கள் எண்ணங்கள் மற்றும் கேள்விகளை பகிர்ந்துகொள்ள விரும்பினால்: